2023ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக முன்னர் செய்தியொன்றில் தெரிவித்திருந்தோம்.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளின்படி, 2023 நவம்பர் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை, ஆனால் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், எனவே அவர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு தணித்து தேர்தலை நடத்தக்கூடிய சூழலை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.