காவந்திஸ்ஸ யானைக்கு இறுதிக்கிரியைகள் – சஜித் பங்கேற்பு

0
24

இலங்கையில் வாழ்ந்த மிகப்பெரிய யானைகளில் ஒன்றான காவந்திஸ்ஸ யானையின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) சியம்பலாங்கமுவ பகுதியில் நடைபெற்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். பௌத்த பிக்குகள் வரவழைக்கப்பட்டு, காவந்திஸ்ஸ யானைக்கு பன்சுகூல சடங்கு உள்ளிட்ட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த காவந்திஸ்ஸ யானை, கடந்த 16ஆம் திகதி காலை சியம்பலாங்கமுவ பகுதியில் உள்ள வயல்வெளியில் விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சையளிக்க முயற்சித்த போதிலும், அன்றைய தினம் மாலை யானை உயிரிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here