அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயரும் அறிகுறி

0
163

அரச உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்புகளில் அரச ஊழியர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை பதில் நிதியமைச்சரிடம் கையளிக்க நிதியமைச்சிற்கு வந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் உட்பட நிலையான மாதாந்த வருமானம் பெறும் குழுக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வை விட நீண்ட கால தீர்விலேயே அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அடுத்த வரவு செலவுத் திட்டம் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here