இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹமாஸின் மூத்த தலைவர் பலி

0
189

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ஜெஹாத் மெய்சன் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பகுதிகளில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தலைமையிலான தேசிய பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இதன் மூத்த தலைவராக ஜெஹாத் மெய்சன் செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஜெஹாத் மெய்சன் அவரது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டுள்ளார்.

காஸாவின் ஷேக் ரத்வான் சுற்றுப்புறத்தில் நடந்த தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் 13ஆவது நாளை எட்டியுள்ளது. போரால் காஸாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.

இது காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும். இரு தரப்பிலும் 5,000 பேர் வரை இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளுக்கு இணங்க காஸாவிற்குள் வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here