தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு 

Date:

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.

ஆனாலும், கட்சியின் செயலாளர் நாயகமான விக்கினேஸ்வரன் இந்தத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருக்கிற நிலையில் சட்டத்தரணி மணிவண்ணணை முதன்மை வேட்பாளராகக் கொண்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

இதற்கமைய மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்கக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் யாழ். மாநகர முதல்வருமான சட்டத்தரணி வி.மணிவண்ணண் பெற்றுக்கொண்டார்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...