IMF இரண்டாவது தவணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது

0
182

இலங்கையின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணியாளர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபையினால் மீளாய்வுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறும் என நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவித் தொகை 660 மில்லியன் டொலர்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here