டயானா கமகே மீது பாராளுமன்றத்தில் தாக்குதல்?

0
186

நாடாளுமன்ற வளாகத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இந்த மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு எதிர்கட்சி உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக அரச அமைச்சரும் அந்த உறுப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக நாடாளுமன்றம் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமையினால் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here