நவம்பர் 13இல் ‘2024’ ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தாக்கல்

0
140

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்குப்பதிவு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here