காஸா மீதான இனப்படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம்

0
141

இஸ்ரேல் – பலஸ்தீன போரை கண்டித்து பலஸ்தீன மக்களுக்காக ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காஸா மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம் – ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

“இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அரசினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டுவருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம்“ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here