மீண்டும் தலைதூக்கும் டெங்கு

0
159
Cropped shot of an unrecognizable doctor holding a stethoscope

தற்போது நிலவும் மழையுடனான சூழலுடன் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் 2339 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் 14070 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13742 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4307 பேரும், மேல்மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தரவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள வளாகங்களை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here