பல கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (23) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாமை தொடர்பில் கவனத்தை ஈர்ப்பதே இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கமாகும்.
களப் பணிகளுக்காக வழங்கப்படும் மைலேஜ் வாடகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை அதிகரிக்கத் தவறியமை முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இந்த கொடுப்பனவுகள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றுக்கு இணையாக இருக்கவில்லை, இதனால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.
“தங்கள் குறைகளை வெளிப்படுத்த, சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தேர்ந்தெடுத்துள்ளது,” என்று சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், துறைமுகம், விமான நிலையம், இரத்த வங்கி, மகப்பேறு மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனை, சிறுநீரகப் பிரிவுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்படாது என்று அவர் மேலும் கூறினார்.