புதிய அரசிலும் ஹரிணியே பிரதமர்

0
57

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசிள்  பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடயங்கள் வழங்கப்படும் என்றும், அதற்கு மேலதிகமாக எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here