சஜித்தை விட்டு தாவினார் தமிதா

0
101

நடிகையும் அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் இணைந்ததுடன், சஜித் பிரேமதாஸ  தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

எஸ்.ஜே.பி.யின் தலைவர் சஜித் பிரேமதாஸ  எனக்கு நியாயம் வழங்காததாலும், எனது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டாததாலும் நான் எஸ்.ஜே.பியை விட்டு வெளியேறத்  தீர்மானித்தேன் என தமிதா அபேரத்ன நேற்று ஊடகங்களுக்குத்  தெரிவித்தார்.

ஒக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி நாளான கடைசி நேரத்தில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான எஸ்.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலில் தமிதாவின் பெயர் சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here