விசாரணைக்கு ஆஜராக ஜோன்ஸ்டன் முடிவு

0
45

பதிவு செய்யப்படாத BMW கார் தொடர்பான விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை (23) ஆஜராகத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி மீளப் பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஹில்டன் ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் கண்டெடுக்கப்பட்ட BMW கார் தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த கார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்பவருடையது என காரை நிறுத்திய நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கார் பதிவு செய்யப்படாத கேரேஜ் எண்ணைப் பயன்படுத்தி இயக்கப்பட்டது, இது தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் போலீசார் விசாரிக்க முயன்றனர், ஆனால் அவர் விசாரணையைத் தவிர்க்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here