பஸ் – ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி

0
169

கட்டுநாயக்கா, அடியம்பலம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சொகுசு பேரூந்து எப்போதும் இணையத்தில் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தெஹிவளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மட்டக்களப்பு வரை இயங்கும்.

இந்த பஸ் கடந்த 22ம் திகதி இரவு 10.45 மணியளவில் அடியம்பலம் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது முன்னால் வந்த முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here