ஜனாதிபதி செய்தது தவறு – மொட்டு கட்சி அதிருப்தி

Date:

கெஹலிய ரம்புக்வெல்ல மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அது எல்லாம் பொய் என்று மாறியது. ஆனால் இந்த விடயத்தில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது என ஜனாதிபதி தீர்மானித்திருக்கலாம். அதன்படி, மருத்துவராக இருக்கும் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும், எங்களுக்கு சில கவலைகள் உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 5 பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான். அது தவறு என்று அறிவிக்கிறோம். ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இதற்கு கட்சியாக நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...