வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்கும்படி நீதிமன்றம் உத்தரவு

0
197

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக மேற்படி கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான ப.உதயராசா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் பத்மன் சூரசேன, ஷிரான் குணதிலக, அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கியிருக்கின்றது.

இது தொடர்பான நீதிமன்ற விளக்கம் இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் எனத் தெரிகின்றது.

மனிதாரர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here