இன்றைய காலநிலை நிலவரம்

Date:

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...