ஜனாதிபதி ரணிலின் முடிவை விமர்சித்து நாமல் கருத்து, வரவு-செலவு திட்டத்தில் தீர்மானம் எடுப்பதாகவும் அறிவிப்பு

Date:

கூட்டு அரசியல் தொடர்பில் ஜனாதிபதிக்கு நல்ல புரிதல் இருக்க வேண்டும் எனவும் அமைச்சரவை திருத்தங்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து கட்சிகளுக்கு இடையில் எவ்வாறு சமாதானத்தை பேணுவது என்பதை ஜனாதிபதி அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இரு தலைவர்களும் இரு திசைகளில் சென்றதாகவும், அதன் விளைவுதான் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத் தீர்மானங்களை மேற்கொள்வது மற்றும் கூட்டு அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் கூட்டணித் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடுவது பொருத்தமானது என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் எம்.பி., இது அமைச்சுக்கள் மாற்றமே என்பதால் இதனை அமைச்சரவை மாற்றமாக கருத முடியாது என கூறுகிறார்.

“அமைச்சரவையை திருத்த ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், இது தொடர்பாக சக கூட்டணிக் கட்சிகளுடன் தெரிவிக்கவும் விவாதிக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றார்”.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான வதந்திகளை மறுத்த எம்.பி., மற்றைய குழுக்கள் அவ்வாறான பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சீர்திருத்த அரசியல்வாதி என்ற வகையில் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி சமர்பிக்கும் வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படையில் கட்சி என்ற ரீதியில் தீர்மானம் எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...