ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை

0
171

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஏ. எம். ஜே. டி அல்விஸ் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ. எம். ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழுவில் தனிப்பட்ட வகையில் எனக்கு பழக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த குழு நியமனத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

நாட்டில் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு தகவல் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விசாரணை செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது.

மேலும் அந்த தகவல் தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணை செய்வதும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த இன்னுமொரு கடமையாகும். அதே போன்று வவுனதீவு சம்பவம் எல். ரி. ரி. ஈ. அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்று புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் அறிவித்தபோது? அந்த காலபகுதியில் அது குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பிலும் விசாரிக்குமாறும் இந்த குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு மாறாக, இது அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காகவோ அல்லது அவர்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை இல்லை.

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அப்துல் லத்தீப், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யபட்டுள்ளது.

மேலும் அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனவே அல்விஸ் அறிக்கை ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக தயாரிக்கப்பட்டது இல்லை என்று அதில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here