அநுர – டக்ளஸ் சந்திப்பு

0
136

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகப் பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்வது மற்றும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த திட்டங்களை ஆரம்பிப்பது வேண்டியவற்றுள் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவால் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியால் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமுகமாக நிறைவடைந்தது என்று ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here