பொதுதேர்தல் திகதியில் மாற்றம்?

0
54

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது மக்களின் இறையாண்மையை மீறுவதாக, அறிஞர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையகமும் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

சட்ட ஆலோசனைக்கு பின்னர், நாடாளுமன்ற தேர்தல் திகதி மாற்றப்படும் என, அரச வட்டாரத் தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய திகதியைக் குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here