களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. யு.நிஷாந்த ஆலையின் தாங்கி அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு தேவையான நாப்தா எரிபொருள் இல்லாததால் அதன் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் தம்மிக்க விமலரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.