ஜேவிபி ஆட்சி அதிகாரத்தினை கோருவது சோதனை செய்யவே – ஆஷு

Date:

நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தனக்கு ஆட்சியை கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் ஜனாதிபதி பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை எனத் தெரிவித்த ஆஷு மாரசிங்க, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்பட முடியாது என்பது இலங்கையிலும் உலகிலும் நிரூபணமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விளாடிமிர் சோலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து உக்ரேனில் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் ஆனால் இன்று யுத்தம் காரணமாக அவர் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது கட்டுப்பாட்டில் கொண்டு டொலர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை எனவும் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...