அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம்

Date:

அதிபர், ஆசிரியர்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகள் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர், ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அரசால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய பாடசாலைகள் முடிவடைந்த பின்னர் யாழிலுள்ள பாடசாலைகள் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, “ரணில் – ராஜபக்‌ஷ அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டிக்கின்றோம்”, “ஆசிரியர் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்காதே”, “வாக்குறுதி கொடுத்த சம்பள உயர்வை வழங்கு”, “மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...