மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Date:

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.

0094711 757 536 அல்லது 0094711 466 585 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் சூழ்நிலைகள் தொடர்பாக அவர்களுக்குத் தேவைப்படும் ஏதேனும் தகவல்கள் அல்லது உதவிகள் தொடர்பாக தொடர்புகொள்ள முடியும்.

தூதரக விவகாரங்களை வழமையான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், டெல் அவிவ் (இஸ்ரேல்) மற்றும் ரமல்லா (பலஸ்தீனம்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...