சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பிக்குகள் இருவர் கைது

0
170

நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி ஹேமமாலியால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா பத்மலால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்த தலைமையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியக நிலைய பொறுப்பதிகாரி ஹேமமாலி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here