மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?

0
163

மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது வரவு செலவுத் திட்டத்தை வெற்றி பெற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக இது முன்னெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொஹொட்டுவவில் உள்ள சில மூத்தவர்களுக்கு அமைச்சரவை மற்றும் அரச அமைச்சர் பதவிகள் கிடைக்கின்ற வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனிடையே அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சுக்களின் சில செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here