இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர், அதற்கமைவாக தேசிய பாதுகாப்புச் சபைகளைக் கூட்டி விரைவான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த புலனாய்வு அமைப்புகள் நாட்டில் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும், அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், அவ்வாறு இல்லாமல் பயணத்தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.