லாஃப்ஸ் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – இரண்டு நாட்களில் நீங்கும்

Date:

சந்தையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...