கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Date:

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்பணிகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன் ஒருபகுதியாக ஒன்பது நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் 17 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளைமுன்னெடுத்த பேராசிரியர் ராஜ் சோமரட்ணவுக்கு நேரமின்மையால் தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அந்நிலையில் பணியானது நாளை 30ஆம் திகதி நீதிமன்றில் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டு அகழ்வுப் பணியானது எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....