சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் மதிய உணவு நேரத்தில் போராட்டம்!

0
184

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி அரச ஊழியர்கள் இன்று (30) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைகள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் மாகாண பொது சேவைகள் உட்பட பல தொழில்களை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதுடன், பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துடன் இணைந்து வலியுறுத்தியுள்ளன.

புகைப்படம் அஜித் செனவிரத்ன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here