ஜோன்ஸ்டனுக்கு பிணை

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் BMW ரக கார் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத BMW கார் இங்கிலாந்தில் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச பொலிஸ் தரவுகளின் படி சம்பந்தப்பட்ட BMW காரின் சேசி எண்ணை சோதனை செய்தபோது, ​​இது 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று வரைக்கும் (அக்டோபர் 30) ​​விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...