வாகன இறக்குமதி மோசடி! விரைவில் கைது செய்யப்பட உள்ள பிரபல அரசியல் புள்ளி!!

Date:

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்ய தயாராகி வந்த மத்திய மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டியில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியொன்றை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று (01) கண்டுபிடித்துள்ளனர்.

வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த பிரதான வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த ஜீப் சம்பந்தப்பட்ட பலமான அரசியல்வாதியினால் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அரசியல்வாதியின் பெயரில் பொய்யான தகவல்களுடன் பதிவுசெய்யப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் வாகனக் காட்சியறை உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...