மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்

0
161

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்கல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று (02) இந்த உத்தரவை பிறப்பிடத்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் குறித்த சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here