நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான புகார்களுக்காக 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 ஆகும். இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 168 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதில், 30 குற்றப் புகார்களும், தேர்தல் விதிகளை மீறியதாக 138 புகார்களும் உள்ளடங்குவதாகவும், அதில் 1,259 புகார்கள் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 13 வன்முறைச் செயல்கள் தொடர்பான புகார்கள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.