நுவரெலியாவில் பிரதான கட்சியொன்று இதொகாவுக்கு ஆதரவு!

0
36

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவந்த சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சி தமது ஆதரவை இதொகாவுக்கு தெரிவித்துள்ளது.

சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சியின் பிரதான வேட்பாளர் காத்தையா குனாலன் அவரின் ஆதரவாளர்கள் சகிதம் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போட்டியிலிருந்து தாம் விலகிக்கொண்டதாகவும், தொடர்ந்நது வரும் காலங்களில் இ.தொ.காவுடன் எமது பயணம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இதொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தேசிய அமைப்பாளர் ராஜதுரை, உபத்தலைவர் சச்சுதானந்தம் ஆகியோர் இனைந்துக் கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here