நாமல் குமாரவின் மற்றும் ஒரு நாடகம்

Date:

பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமார வரகாபொல நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டுக்குள் வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நாமல் குமார பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வாரியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் வீடொன்றில் விசாரணை நடத்துவதற்காக சென்ற போது குறித்த பெண் உள்ளிட்ட சிலர் தம்மை தாக்கியதாக நாமல் குமார பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் வரக்காபொல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ஆகியோர் கூறியதன் பிரகாரம் தான் உளவு பார்க்கச் சென்றதாக நாமல் கூறியபோதும் , ஆனால் நாமல் குமார தமக்கு ஒருபோதும் புலனாய்வுத் தகவல்களை வழங்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாமல் குமாரவை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட ஐவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாமல் குமார கடந்த அரசாங்கத்தின் போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் மூலம் பிரபலமானார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அந்த அறிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...