இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோவிற்கு 25 சதம் இறக்குமதி வரி நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாவிலிருந்து 300-325 ரூபாவாக அதிகரிக்குமெனவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, சீனி வரி அதிகரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பிரதான சீனி இறக்குமதியாளர் 8000 மெட்ரிக் தொன் சீனியை 25 சத வரிக்கு இறக்குமதி செய்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2020இல் சீனி இறக்குமதி வரியை ஐம்பது ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அப்போதைய அரசாங்கம் குறைத்தது.
இதனால் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத்திற்கு 10,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.