லொஹான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0
51

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (02) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் தயாரிப்பு செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட லோகன் ரத்வத்த, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் அவரை வைத்திய சிகிச்சைக்காக அனுப்புமாறு நீதவான் சிபாரிசு செய்ததன் காரணமாக லோகன் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here