கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி என்ற பெண்ணின் பாரிய நிதி மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி இன்று (04) காலை கொழும்பு கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.