ஆளுங்கட்சியுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

0
225

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் ஒன்றிணைந்து சந்திப்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது.

பொதுஜன பெரமுனவில் சில விசேட பிரச்சினைகள் காணப்படுவதாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பொஹொட்டுவவில் இருந்து சுதந்திரமாக செயற்பட்டு ஜனாதிபதி மற்றும் பொஹொட்டுவ அமைச்சர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து முரண்பாடுகளினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here