உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை (07) வரை முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
நாளை வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாதவர்கள் தமது அடையாளத்தை சரிபார்த்து அதனை தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு குறிக்கப்பட்ட தபால் வாக்குகளை ஒதுக்கிய பொதிகளை விநியோகிப்பது தொடர்பாகவும் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் கருத்து தெரிவித்தார்.