முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையில் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் 17ஆம் திகதி தொடரவுள்ளன.
