சன்னி லியோன் ரசிகர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Date:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கும் தமிழ்ப் படம், ‘ஓ மை கோஸ்ட்’. முக்கிய கேரக்டர்களில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, ரமேஷ் திலக், அர்ஜூனன் நடித்துள்ளனர்.

தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்ய, ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கிய டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற சன்னி லியோன் பேசியதாவது:

மீண்டும் நான் தமிழில் நடிக்க வந்தது குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்தப் படத்துக்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கியுள்ளோம். இதில் நான் வீரம் மிகுந்த ராணி கேரக்டரில் நடித்துள்ளேன். இப்படத்தைப் பார்க்க உங்களது நேரத்தையும், பணத்தையும் கண்டிப்பாக நீங்கள் ஒதுக்க வேண்டும். அதற்காக முன்கூட்டியே உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் கனவை நீங்கள் திரையில் பார்க்கப் போகிறீர்கள். உங்கள் அன்பும், ஆதரவும் எங்களுக்கு கட்டாயம் தேவை. நல்ல கதைகள் அமைந்தால், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...