கற்பழிப்பு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே சிட்னி சில்வர் வாட்டர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்க மறுத்த நீதிபதியின் உத்தரவின் அடிப்படையிலேயே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஜனவரி 12, 2023 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.