இந்தோனேசியாவில் பண்டா கடலில் நிலநடுக்கம்; இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை

0
81

இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து எவ்வித தகவல்களையும் இதுவரை இந்தோனேசிய அரசாங்கம் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.9 என அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிலையத்தின் தகவல்களின் பிரகாரம், இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் உள்ள சாம்லாகி நகரில் நடுக்கம் மிதமாக உணரப்பட்டது.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தோனேசியாவின் நிலப்பரப்பு காணப்படுவதுடன், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில், இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இதில் 602 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here