கிரிக்கெட் சபைக்கு மீண்டும் சுயாதீன குழு

0
65

விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

அந்த மூன்று உறுப்பினர்கள் பின்வருமாறு,

எஸ்.ஐ. இமாம் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்

ரோஹினி மாரசிங்க – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்

ஐரங்கனி பெரேரா – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்

விளையாட்டுத்துறை அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் முக்கிய பொறுப்புகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சுயாதீன குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தினால் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல், மோசடி, முறைகேடுகள் மற்றும் தோல்விகள் குறித்து ஆராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்து அதற்கான மூலோபாய வழிமுறைகளைத் தயாரிப்பதே பரிந்துரைகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here