பொதுத் தேர்தல் தினத்தன்று இலங்கைவரும் உயர்மட்ட குழு

Date:

விரிவாக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைய இலங்கைக்கு மூன்றாவது தவணை கடனை வழங்குவதற்கான மதிப்பாய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இம்மாதம் முதல் வாரத்தில் இந்த குழு இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும் பொதுத் தேர்தல் காலம் என்பதால் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டதுடன், பொதுத் தேர்தல் தினத்தன்றே வருகை தருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன் பிரகாரம் 14ஆம் திகதி இந்த உயர்மட்ட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழு கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்ததுடன், 4ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

கடந்த வாரம் வாஷிங்டனில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிருஷ்ணா சீனிவாசன், விரைவில் இலங்கைக்கு மூன்றாம் கட்ட கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் மதிப்பாய்வுகளை நடத்த வருகைத்தர உள்ளதாக கூறியிருந்தார்.

இந்தப் பின்புலத்திலேயே எதிர்வரும் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கை வர உள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் புதன்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட மதிப்பாய்வு மற்றும் இறுதிகட்ட கலந்துரையாடல்கள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும். பெப்ரவரி மாதத்துக்கு முன் மூன்றாம் கட்ட கடன் வசதி கிடைக்கப்பெறும்.” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைய மூன்றாவது தவணையாக 336 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெறும். 48 மாதகால செயற்திட்டத்துக்கு அமைய சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் வழங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...