புதிய தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

Date:

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் இந்த புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...